ஆதார் அட்டையில் திருத்தம், மாற்றங்களை அஞ்சலகங்களில் செய்து கொள்ளலாம்

ஆதார் அட்டையில் திருத்தம், மாற்றங்களை அஞ்சலகங்களில் செய்து கொள்ளலாம்
x
தினத்தந்தி 8 July 2017 2:30 AM IST (Updated: 7 July 2017 8:27 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் வ.முத்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் வ.முத்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய அஞ்சல்துறை பொது மக்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதார் அட்டைகளில் திருத்தம், மாற்றம் செய்து புதிய ஆதார் அட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டினை திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், குடியாத்தம் தலைமை அஞ்சலகம், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, நாட்டறம்பள்ளி துணை அஞ்சலகங்களில் 13–ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்படும்.

பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டையில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்ய விரும்புவோர் அஞ்சலகங்களில் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இச்சேவை திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மற்ற துணை அஞ்சலகங்களிலும் விரைவில் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story