போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்ற காருக்குள் நுழைந்த பச்சைப் பாம்பு
காருக்குள் நுழைந்த பச்சைப் பாம்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பரபரப்பு
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தேவைகளுக்காக பலரும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருவது வழக்கம். போலீஸ் அதிகாரிகளும் தங்கள் சொந்த வேலைக்காக வரும்போது கார்களில் வந்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்வார்கள்.
அவ்வாறு நேற்று போலீஸ் அதிகாரி ஒருவர் அவருக்கு சொந்தமான காரை அங்குள்ள கோவிலின் அருகே நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்தில் அந்த பக்கமாக சென்ற ஒருவர் காரின் அருகே ஒரு பச்சை பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்தார். வேகமாக சென்ற அந்த பாம்பு காருக்குள் நுழைந்தது.
உடனடியாக அவர் அருகில் நின்ற சிலரிடம் பாம்பு காருக்குள் நுழைந்தது பற்றி கூறினார். அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர். ஆனால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர் காரின் கதவுகளை திறந்தார். பின்னர் காருக்குள் எங்காவது பாம்பு இருக்கிறதா? என்று அனைவரும் தேடிப்பார்த்தனர். அங்கு நின்ற போலீசார் சிலரும் விரைந்து வந்து பாம்பு எங்கே? என்று தேடினார்கள். ஆனால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. காருக்குள் சென்ற பாம்பு வேறு எங்கும் செல்லவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.
எனவே காருக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து பாய்ச்சினார்கள். பாம்பு வெளியே வரவே இல்லை. அது காரின் இடைவெளியில் வசமாக சுருண்டு இருந்தது. பின்னர் கார் அருகில் உள்ள சர்வீஸ் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்ததும் பாம்பு வெளியே வந்தது.
உடனடியாக அந்த பாம்பினை ஒரு பாலித்தீன் பைக்குள் போட்டு மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அதை அடித்துக்கொன்று அங்குள்ள புதர் பகுதியில் வீசினார்கள். இந்த சம்பவத்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story