தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2017 3:45 AM IST (Updated: 7 July 2017 10:47 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்டனர்.

தர்மபுரி,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட இணை செயலாளர் காவேரி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட செயலாளர் இளங்குமரன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது வருவாய்த்துறை ஊழியர் சங்க நிர்வாகிகளை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தாக்குதல் சம்பவத்திற்கு மூலகாரணமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story