சங்கரன்கோவிலில் ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு: விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று 3–வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று 3–வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசைத்தறி உரிமையாளர்கள்ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் திருமுருகன் சிறு விசைத்தறி கூலி தொழிலாளர் சங்கம், விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம், சிந்தாமணி வட்டார விசைத்தறி நெசவாளர் சங்கம், சுப்புலாபுரம் அறிஞர் அண்ணா சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தினால் தினமும் ரூ.1 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று திருவேங்கடம் சாலையில் உள்ள பாடாப்பிள்ளையார் கோவில் முன்பு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதன் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் சங்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தில்லையம்பலம், ரவி, முத்துசங்கரநாராயணன், பரமசிவம், அருணகிரி, கணேசன், பழனியாண்டி, மாரிமுத்து, தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாடசாமி, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






