நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அரசு பொருட்காட்சியில் குவிந்த பொதுமக்கள்


நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அரசு பொருட்காட்சியில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 July 2017 2:00 AM IST (Updated: 8 July 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுன் மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அரசு பொருட்காட்சி கடந்த 25–ந் தேதி தொடங்கியது.

நெல்லை,

நெல்லை டவுன் மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அரசு பொருட்காட்சி கடந்த 25–ந் தேதி தொடங்கியது. இங்கு அரசின் சாதனைகளை விளக்கி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பள்ளி கல்வித்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்பட 27 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அரசு பொருட்காட்சியில் நேற்று பொது மக்கள் குவிந்தனர். பொது மக்கள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை எடுத்து விட்டு உள்ளே சென்றனர். அனைத்து அரங்குகளிலும் கூட்டம் அலைமோதியது. அனைத்து அரங்கங்களிலும் அரசின் சாதனை விளக்க புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தன. அரசின் நலத்திட்ட உதவிகள் எப்படி பெறுவது? என்பதை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் வரை பொருட்காட்சியை 19 ஆயிரத்து 534 பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 655 வருவாய் கிடைத்துள்ளது.


Next Story