கடல்வாழ் உயிரினங்களின் அழிவைக் கணிக்க திமிங்கலத்தைக் கொண்டு ஆய்வு


கடல்வாழ் உயிரினங்களின் அழிவைக் கணிக்க திமிங்கலத்தைக் கொண்டு ஆய்வு
x
தினத்தந்தி 8 July 2017 7:15 PM IST (Updated: 8 July 2017 2:17 PM IST)
t-max-icont-min-icon

திமிங்கலங்களின் உடல் அளவு சுருங்குவதை வைத்து, கடல்வாழ் உயிரினங்களின் அழிவைக் கணிக்கலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

தீவிர வேட்டையாடுதலின் காரணமாக, 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நான்கு திமிங்கல இனங்களின் சராசரி உடல் அளவு விரைவாகக் குறைந்துவிட்டது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஆனால் திமிங்கலத்தின் எண்ணிக்கை சரிவதற்கு 40 வருடங்களுக்கு முன்பே, எச்சரிக்கை அறிகுறிகள் காணப்பட்டன.

1900 மற்றும் 1985-ம் ஆண்டுகளுக்கு இடையில் கப்பல்களால், வணிக ரீதியாகப் பிடிக்கப்பட்ட திமிங்கலங்களின் உடல் அளவைக் கொண்ட ஏராளமான ஆவணங்களை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிளெமென்ட்ஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

அவர்கள், நீல நிறத் திமிங்கலம், பின், சேய் மற்றும் ஸ்பெர்ம் வகை திமிங்கலம் ஆகிய விதவிதமான திமிங்கலங்கள் தொடர்பான தரவுகளை ஆராய்ந்ததில், அவற்றின் உடல் அளவுகள் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“1905-ம் ஆண்டு இருந்ததை விட, 1980களில், ஸ்பெர்ம் வகை திமிங்கலத்தின் உடல் அளவு நான்கு மீட்டர்கள் குறைவாக இருந்திருக்கிறது” என்கிறார், கிளெமென்ட்ஸ்.

கடலில் உள்ள பெரிய உயிரினங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டதால், இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
“இதன் அர்த்தம், திமிங்கலங்களின் எண்ணிக்கை சரிவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே அதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறியக்கூடியதாக இருந்தது என்பதுதான்” என்று கிளெமென்ட்ஸ் கூறினார்.

இதேபோன்ற போக்கு முன்பு பல மீன் வகைகளில் காணப்பட்டபோது, அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுவதன் விளைவாக இந்த நிலை ஏற்பட்டது என்று புரிந்துகொள்ளப்பட்டது.

கடல் வாழ் உயிரினங்களின் சராசரி உடலின் அளவில் உள்ள மாற்றங்களைக் கண்காணிப்பது, அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்தில் உள்ளதா என்று கணிக்க உதவும் என்று இந்த முடிவு தெரிவிக்கிறது.

“எங்களது தொழில்நுட்பத்தை, அழிந்து விடும் என்ற அச்சம் நிலவும் பிற உயிரினங்களுக்கு உதவப் பயன்படுத்தலாம். மேலும், அழிவை சந்திக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது உதவும்” என்கிறார், கிறிஸ்டோபர் கிளெமென்ட்ஸ்.
1 More update

Next Story