3 செல்லம்மா: அற்புத கவியின் அருமைக்காதலி!

காவியங்களை விட அதிகமாக அதை படைத்தவர்களின் வாழ்வு ஆயிரமாயிரம் அதிசயங்களைக் கொண்டது.
காவியங்களை விட அதிகமாக அதை படைத்தவர்களின் வாழ்வு ஆயிரமாயிரம் அதிசயங்களைக் கொண்டது. அப்படி நவரசங்களும் கலந்து வாழ்ந்த பாரதி-செல்லம்மாவைப் பற்றி இத்தொடரில் பார்த்து வருகிறோம். புதுவை வாழ்வு குறித்த செல்லம்மாவின் எண்ணங்களைப் போன வாரம் பார்த்தோம். அவர் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்? பாரதியின் காதல் எத்தகையது? இப்போது காணலாம்.
பாரதியின் எழுத்துகளும் புகழும் ஓரளவுக்கு பரவி இருந்த காலம் அது. புதுச்சேரியில் நிரந்தர வருமானம் இல்லையே தவிர அவ்வப்போது உதவி செய்ய நண்பர்கள் இருந்தார்கள்.
ஈஸ்வரன் தர்மராஜா கோவில் வீதியில் பாரதி குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு பாரதியின் மீது பெரும் மரியாதை. எதையும் கொஞ்சம் ‘வழவழ’ என்று பேசும் அவருக்கு ‘விளக்கெண்ணெய் செட்டியார்’ என்று பெயர் வைத்தார் பாரதி.
வாடகைப் பணம் என்று பாரதியிடம் அவர் கேட்டதே இல்லை. செட்டியார் வருவார். பாரதி பாடிக்கொண்டிருப்பார். அதை அப்படியே நின்று கேட்பார். பாரதி பேச்சு கொடுத்தால் மட்டுமே பேசுவார். இல்லாவிட்டால் எதுவும் கேட்காமல் போய் விடுவார். சில நேரங்களில் பணம் இருந்தால் பாரதி கொடுப்பார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி செட்டியார் மடியில் பணத்தோடுதான் பாரதியைப் பார்க்க வருவார். குறிப்பறிந்து பணம் அளித்துவிட்டு போகும் அவருக்கு ‘வெல்லச்சு செட்டியார்’ என்று பெயர் வைத்திருந்தார் பாரதி.
இவர்கள் போக தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வீட்டில் இருப்பவர்களுக்கு துணிமணிகள், பட்டாசு, இனிப்பு எல்லாம் நண்பர்கள் அனுப்பி வைத்து விடுவார்கள்.
கையில் பணம் கிடைத்து விட்டால் பாரதி ‘தயாளப்பிரபு’வாக மாறிவிடுவார். வீட்டிலே செல்லம்மா படும் திண்டாட்டங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்.
‘இந்தியா’ பத்திரிகை நின்ற பிறகு புதுச்சேரியில் இருந்தபடியே சுதேசமித்திரனுக்கு எழுதி வந்தார். ஒரு முறை பாரதியார் நண்பர்களோடு இருக்கும் போது அதற்கான சன்மானம் மணியார்டரில் வந்தது.
அந்த நேரம் பார்த்து, ‘காலையில் இருந்து வியாபாரமே இல்லையே. இன்றைக்கு எப்படி உலை வைப்பதோ?’ என்று புலம்பியபடியே மாம்பழம் விற்கும் பெண் ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அதை கேட்ட பாரதி, உடனே மொத்த மாம்பழத்தையும் காசு கொடுத்து வாங்கி தன் நண்பர்களுக்கு கொடுத்து விட்டு வெறுங்கையோடு வீட்டுக்குப் போனார்.
இன்னொரு முறை கசாப்புக்கடையில் வெட்டுப் படுவதற்கு தயாராக இருந்த ஆடு பாரதியின் பார்வையில் பட்டுவிட்டது. அதைக் காசு கொடுத்து வாங்கி காப்பாற்றினார். ஆனால் தொடர்ந்து பராமரிக்க முடியாமல் தவித்தது தனி கதை.
ஒரு முறை தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து அன்பர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாரதிக்கு பணம் அனுப்பினார்கள். அந்தப்பணம் ஒரு வாரத்திற்குக் கூட அவரிடம் தங்கவில்லை. பணம் என்றில்லை. ‘கோச்’ வண்டி ஓட்டும் ஏழைகளுக்கும், குடுகுடுப்பைக் காரர்களுக்கும் மேலே போட்டிருக்கும் அங்கவஸ்திரம், இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போன்றவற்றை அவிழ்த்து கொடுத்துவிடுவார்.
இப்படி ஒரு குழந்தையை விட மோசமாக பணத்தையும், பொருட் களையும் கையாண்ட பாரதியால் செல்லம்மா நாள் தோறும் அல்லல்பட்டார். அரிசிக்கும் பருப்புக்கும் அக்கம் பக்கத்து வீடுகளில் எல்லாம் கடன் வாங்குவது தொடர்கதையாகவே இருந்தது. பாரதி வீட்டில் வேலை பார்த்த அய்யாக்கண்ணு, எங்காவது சென்று எப்படியாவது கடன் வாங்கிக்கொண்டு வந்து சேர்த்துவிடுவார்.
(வேலைக்காரரைப் போல் இல்லாமல் வீட்டில் ஒருவராகவே இருந்த அய்யாக்கண்ணு என்ற பெண்மணியைப் பற்றி பாரதியார் பாடல் எழுதியிருக்கிறார்).
அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத வீட்டில் பிரச்சினைகள் இருக்கத்தானே செய்யும். பாரதியின் தேவையற்ற செலவுகளை செல்லம்மா எதிர்ப்பார். இதனால் இரண்டு பேருக்கும் சண்டை நடக்கும். வேறு வழியில்லாமல்தான் செல்லம்மா கேட்கிறார் என்ற உண்மை பாரதிக்கும் தெரிந்தே இருந்தது. அதனால்தான் ‘செல்லம்மாவே தன் செல்வம்’ என்று அவர் போற்றுகிறார்.
“வீட்டின் தலைவி எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு போனால், தலைவன் கவலையில்லாமல் நோயில்லாமல் இருக்கலாம். தலைவிக்கு முக்கியமாக வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள். அது இல்லாததால் என்னைக் கட்டுப் படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்; எனக்கு வருந்திச் சாதம் ஊட்டுகிறாள்; இதை உலகம் அறிய வேணும். நம் கஷ்டம் விடிய வேணும். புதிதாகச் சூரியன் வருவதைப் போல் புதிய புதிய விஷயங்களைப் பார்த்து மகிழ வேணும். என் செல்லம்மா முக்கியப் பிராணன்! என் செல்வம்! எல்லாம் எனக்கு அவள்தான். அவள் பாக்கியலக்ஷ்மி”.
பாரதி செல்லம்மாவை அவ்வளவு உயர்வாக நேசித்தார். மனைவி என்பதைத் தாண்டி ‘எனதருமைக் காதலி’ என்று சொல்வதில் தான் அவருக்கு விருப்பம்.
சில நேரத்தில் குழந்தைகள் முன்பே செல்லம்மாவிடம் காதல் மொழி பேசுவார்.
‘அய்யோ... குழந்தைகள் இருக்கிறார்கள்...’ என்றால், ‘இருக்கட்டுமே; குழந்தைகளின் மனதை அறியும் சாஸ்திரம் படித்திருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்.. எனக்கு 10 வயதிலேயே காதல் வந்துவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லாமல் விட்டதால்தான் மண்ணாயிற்று!’ என்பார்.
தன் கவிதைகளில் ‘செல்லம்மா’ என்று அவர் எழுதி வைத்திருந்ததைப் பார்த்து அவரது மைத்துனர் அப்பாத்துரை, ‘மற்றவர்கள் பாடும் போது நன்றாக இருக்காதே’ என்று சொன்னார். அதன்பின்னரே பாரதி ‘கண்ணம்மா’ என்று மாற்றி இருக்கிறார்.
‘கல்யாண பந்தம் செய்து கொள்வது எளிது; ஆனால் அதை அறுக்க இருபது யானைகள் வந்தாலும் முடியாது’ என மனமுருக பாரதி சொல்வார்.
அத்தகைய அன்பை, அளப்பரிய காதலை லெளகீக வாழ்வின் நடைமுறைச் சிக்கல்கள் அடித்து உடைத்து விடுகின்றன. சாதாரண மனிதனில் தொடங்கி, சரித்திரம் படைத்த மகாகவி வரை யாரும் இதற்கு விதி விலக்கல்ல.
பணம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, பாரதி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை கள் ஆச்சாரங்களில் ஊறி வளர்ந்த செல்லம்மாவுக்கு பெரும் சோதனையாகவும் வேதனையாகவுமே அமைந்தன.
அப்படிதான் ஒரு முறை வள்ளுவ குலத்தைச் சேர்ந்த கனகலிங்கம் என்ற இளைஞருக்கு தன் நடுவீட்டில் வைத்து, ஹோமம் வளர்த்து பூணூல் போட்டுவிட்டார் பாரதி. ‘இன்று முதல் நீ பிராமணன்’ என்று சொல்லி அனுப்பினார். இதைக் கண்டு செல்லம்மா மனம் நொறுங்கினார்.
அடுத்த சில நாட்களில் இளைய மகள் சகுந்தலாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராக தன் கணவன் செய்த செயலே இதற்கு காரணம் என செல்லம்மா அழுதார். ஒரு வழியாக காய்ச்சல் குணமானதும் பாரதி, தமக்கு மிகவும் பிடித்த பராசக்தியிடம் கோபமாக பேசினார்...
‘பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன் மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்து விடக் கூடாதா?. முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய் விட்டது. இரண்டு மாத காலம் இரவும், பகலுமாக நானும் செல்லமாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ! உன்னை வாழ்த்துகிறேன்’.
‘கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!’
‘பராசக்தீ! ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன் களெல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும், என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க. நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை இல்லாதபடி அற்புதமான ஒளிச்சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டு ஒன்றை என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்’.
‘தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக்கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?’
பாரதியின் கோபத்தில் இருந்த நியாயத்தை பராசக்தி புரிந்து கொண்டது போல தெரியவில்லை.
பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எல்லாவற்றையும் தாண்டி பாரதி செய்த ஒரு வேலை செல்லம்மாவை ஆத்திரத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பெரியம்மா வீட்டில் வளர்ந்து 12 வயதான பிறகு சொந்த வீட்டுக்கு வந்த மூத்த மகள் தங்கம்மாவை வேறு சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க பாரதி விரும்பினார்.
இதை அறிந்த செல்லம்மா, இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு சொல்லாமல், கொள்ளாமல் தன் தாய் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். புதுவைக்குப் போன ஆரம்பத்தில் சொந்த ஊரான கடையத்திற்கு தனியாக போவதற்கு செல்லம்மா பயப்படுவார். அதற்காகவே கூட ஒருவரை அனுப்பி விட்டுவிட்டு வரச்சொல்வார் பாரதி.
எப்போதும் அவரது குடும்பத்தை வேவு பார்ப்பதற்கு பிரிட்டிஷ் போலீசார் பின்னாலேயே சுற்றி வந்ததால், நாளடைவில் பாதுகாப்புக்கு ஒருவர் எதற்கு என்று தனியாகவே சென்று வர ஆரம்பித்தார். அப்படிதான் இப்போதும் புறப்பட்டு போய்விட்டார்.
செல்லம்மா இல்லாமல் பாரதி தவித்து போனார். பாரதி மீது வெறித்தனமான நேசம் கொண்டு ஒரு சேவகனைப்போல இருந்த கிருஷ்ணமாச்சாரி எனும் குவளை கண்ணன் கவனித்துகொண்டார். ஆனாலும் கவலையால் பாரதி உடல் மெலிந்து போனார். தாடி வைத்தார். (பாரதி தாடியோடு இருக்கும் படம் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்டதுதான்).
பாரதியின் நிலை பற்றி செல்லம்மாவுக்கு குவளை கண்ணன் கடிதம் எழுதினார். உடனே அடித்து பிடித்து ஓடி வந்தார். மூத்த மகளை மட்டும் கடையத்திலேயே விட்டுவிட்டு இளைய மகளை மட்டும் அழைத்து வந்திருந்தார். பாரதிக்கு இது பெரும் வருத்தத்தைத் தந்தது. தன் மீது நம்பிக்கை இல்லாமல்தான் செல்லம்மா மகளை ஊரில் தங்க வைத்துவிட்டதாக நினைத்தார். கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். ரெயில் நிலையத்தில் அவரைக் கண்டுபிடித்த பாரதிதாசன் சமாதானப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
நாளொரு களேபரங்களுக்கு மத்தியில் நடந்த புதுச்சேரி வாழ்க்கை பாரதிக்கு மட்டுமல்ல; குடும்பத்தாருக்குமே சலிப்பை ஏற்படுத்தியது. ‘எத்தனை நாட்களுக்குதான் காவல்துறைக்கு அஞ்சியும், அவர்கள் கொடுக்கிற தொல்லைகளைத் தாங்கியும் வாழ்வது? நடப்பதை எதிர்கொண்டு சென்னைக்குப் போய்விட்டால் ஜீவனத்திற்கு வழி தேடிக்கொள்ளலாம்’ என்று முடிவெடுத்தார்கள். சாமான்களை இரு ஜட்கா வண்டிகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு பத்தாண்டு கால புதுச்சேரி வாழ்க்கையை முடித்துவிட்டு புறப்பட்டார்கள். ஆனால் சென்னைக்குப் போகமுடியாமல் கடையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்? செல்லம்மாவின் கடைசி காலம் எப்படி இருந்தது?
(ரகசியங்கள் தொடரும்)
மிருக ராஜாவும், கவிராஜாவும்!
மைசூர் விலங்குகாட்சிச் சாலைக்கு ஒரு முறை சென்றார்கள். அங்கே சிங்கம் இருந்ததைப் பார்த்துவிட்டு பாரதிக்கு உற்சாகம் பிறந்தது. சுற்றியிருந்தவர்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அதன் அருகே நெருங்கிப்போனார்.
‘மிருகராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும், வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்களென்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜா’ என்றார் பாரதி.
உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிடம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும் வரை அரை மணி நேரம் சிங்கத்தைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவினார். அதுவரை பயத்தால் நடுங்கியபடி கடவுளை வேண்டிக்கொண்டிருந்த செல்லம்மாவின் வற்புறுத்தலினால் சிங்கத்தின் வாயில் மட்டும் கையை வைக்காமல் அதனிடம் இருந்து விடை பெற்று வந்தார் பாரதி.
பாரதியின் எழுத்துகளும் புகழும் ஓரளவுக்கு பரவி இருந்த காலம் அது. புதுச்சேரியில் நிரந்தர வருமானம் இல்லையே தவிர அவ்வப்போது உதவி செய்ய நண்பர்கள் இருந்தார்கள்.
ஈஸ்வரன் தர்மராஜா கோவில் வீதியில் பாரதி குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு பாரதியின் மீது பெரும் மரியாதை. எதையும் கொஞ்சம் ‘வழவழ’ என்று பேசும் அவருக்கு ‘விளக்கெண்ணெய் செட்டியார்’ என்று பெயர் வைத்தார் பாரதி.
வாடகைப் பணம் என்று பாரதியிடம் அவர் கேட்டதே இல்லை. செட்டியார் வருவார். பாரதி பாடிக்கொண்டிருப்பார். அதை அப்படியே நின்று கேட்பார். பாரதி பேச்சு கொடுத்தால் மட்டுமே பேசுவார். இல்லாவிட்டால் எதுவும் கேட்காமல் போய் விடுவார். சில நேரங்களில் பணம் இருந்தால் பாரதி கொடுப்பார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி செட்டியார் மடியில் பணத்தோடுதான் பாரதியைப் பார்க்க வருவார். குறிப்பறிந்து பணம் அளித்துவிட்டு போகும் அவருக்கு ‘வெல்லச்சு செட்டியார்’ என்று பெயர் வைத்திருந்தார் பாரதி.
இவர்கள் போக தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வீட்டில் இருப்பவர்களுக்கு துணிமணிகள், பட்டாசு, இனிப்பு எல்லாம் நண்பர்கள் அனுப்பி வைத்து விடுவார்கள்.
கையில் பணம் கிடைத்து விட்டால் பாரதி ‘தயாளப்பிரபு’வாக மாறிவிடுவார். வீட்டிலே செல்லம்மா படும் திண்டாட்டங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்.
‘இந்தியா’ பத்திரிகை நின்ற பிறகு புதுச்சேரியில் இருந்தபடியே சுதேசமித்திரனுக்கு எழுதி வந்தார். ஒரு முறை பாரதியார் நண்பர்களோடு இருக்கும் போது அதற்கான சன்மானம் மணியார்டரில் வந்தது.
அந்த நேரம் பார்த்து, ‘காலையில் இருந்து வியாபாரமே இல்லையே. இன்றைக்கு எப்படி உலை வைப்பதோ?’ என்று புலம்பியபடியே மாம்பழம் விற்கும் பெண் ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அதை கேட்ட பாரதி, உடனே மொத்த மாம்பழத்தையும் காசு கொடுத்து வாங்கி தன் நண்பர்களுக்கு கொடுத்து விட்டு வெறுங்கையோடு வீட்டுக்குப் போனார்.
இன்னொரு முறை கசாப்புக்கடையில் வெட்டுப் படுவதற்கு தயாராக இருந்த ஆடு பாரதியின் பார்வையில் பட்டுவிட்டது. அதைக் காசு கொடுத்து வாங்கி காப்பாற்றினார். ஆனால் தொடர்ந்து பராமரிக்க முடியாமல் தவித்தது தனி கதை.
ஒரு முறை தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து அன்பர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாரதிக்கு பணம் அனுப்பினார்கள். அந்தப்பணம் ஒரு வாரத்திற்குக் கூட அவரிடம் தங்கவில்லை. பணம் என்றில்லை. ‘கோச்’ வண்டி ஓட்டும் ஏழைகளுக்கும், குடுகுடுப்பைக் காரர்களுக்கும் மேலே போட்டிருக்கும் அங்கவஸ்திரம், இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போன்றவற்றை அவிழ்த்து கொடுத்துவிடுவார்.
இப்படி ஒரு குழந்தையை விட மோசமாக பணத்தையும், பொருட் களையும் கையாண்ட பாரதியால் செல்லம்மா நாள் தோறும் அல்லல்பட்டார். அரிசிக்கும் பருப்புக்கும் அக்கம் பக்கத்து வீடுகளில் எல்லாம் கடன் வாங்குவது தொடர்கதையாகவே இருந்தது. பாரதி வீட்டில் வேலை பார்த்த அய்யாக்கண்ணு, எங்காவது சென்று எப்படியாவது கடன் வாங்கிக்கொண்டு வந்து சேர்த்துவிடுவார்.(வேலைக்காரரைப் போல் இல்லாமல் வீட்டில் ஒருவராகவே இருந்த அய்யாக்கண்ணு என்ற பெண்மணியைப் பற்றி பாரதியார் பாடல் எழுதியிருக்கிறார்).
அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத வீட்டில் பிரச்சினைகள் இருக்கத்தானே செய்யும். பாரதியின் தேவையற்ற செலவுகளை செல்லம்மா எதிர்ப்பார். இதனால் இரண்டு பேருக்கும் சண்டை நடக்கும். வேறு வழியில்லாமல்தான் செல்லம்மா கேட்கிறார் என்ற உண்மை பாரதிக்கும் தெரிந்தே இருந்தது. அதனால்தான் ‘செல்லம்மாவே தன் செல்வம்’ என்று அவர் போற்றுகிறார்.
“வீட்டின் தலைவி எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு போனால், தலைவன் கவலையில்லாமல் நோயில்லாமல் இருக்கலாம். தலைவிக்கு முக்கியமாக வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள். அது இல்லாததால் என்னைக் கட்டுப் படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்; எனக்கு வருந்திச் சாதம் ஊட்டுகிறாள்; இதை உலகம் அறிய வேணும். நம் கஷ்டம் விடிய வேணும். புதிதாகச் சூரியன் வருவதைப் போல் புதிய புதிய விஷயங்களைப் பார்த்து மகிழ வேணும். என் செல்லம்மா முக்கியப் பிராணன்! என் செல்வம்! எல்லாம் எனக்கு அவள்தான். அவள் பாக்கியலக்ஷ்மி”.
பாரதி செல்லம்மாவை அவ்வளவு உயர்வாக நேசித்தார். மனைவி என்பதைத் தாண்டி ‘எனதருமைக் காதலி’ என்று சொல்வதில் தான் அவருக்கு விருப்பம்.
சில நேரத்தில் குழந்தைகள் முன்பே செல்லம்மாவிடம் காதல் மொழி பேசுவார்.
‘அய்யோ... குழந்தைகள் இருக்கிறார்கள்...’ என்றால், ‘இருக்கட்டுமே; குழந்தைகளின் மனதை அறியும் சாஸ்திரம் படித்திருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்.. எனக்கு 10 வயதிலேயே காதல் வந்துவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லாமல் விட்டதால்தான் மண்ணாயிற்று!’ என்பார்.
தன் கவிதைகளில் ‘செல்லம்மா’ என்று அவர் எழுதி வைத்திருந்ததைப் பார்த்து அவரது மைத்துனர் அப்பாத்துரை, ‘மற்றவர்கள் பாடும் போது நன்றாக இருக்காதே’ என்று சொன்னார். அதன்பின்னரே பாரதி ‘கண்ணம்மா’ என்று மாற்றி இருக்கிறார்.
‘கல்யாண பந்தம் செய்து கொள்வது எளிது; ஆனால் அதை அறுக்க இருபது யானைகள் வந்தாலும் முடியாது’ என மனமுருக பாரதி சொல்வார்.
அத்தகைய அன்பை, அளப்பரிய காதலை லெளகீக வாழ்வின் நடைமுறைச் சிக்கல்கள் அடித்து உடைத்து விடுகின்றன. சாதாரண மனிதனில் தொடங்கி, சரித்திரம் படைத்த மகாகவி வரை யாரும் இதற்கு விதி விலக்கல்ல.
பணம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, பாரதி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை கள் ஆச்சாரங்களில் ஊறி வளர்ந்த செல்லம்மாவுக்கு பெரும் சோதனையாகவும் வேதனையாகவுமே அமைந்தன.
அப்படிதான் ஒரு முறை வள்ளுவ குலத்தைச் சேர்ந்த கனகலிங்கம் என்ற இளைஞருக்கு தன் நடுவீட்டில் வைத்து, ஹோமம் வளர்த்து பூணூல் போட்டுவிட்டார் பாரதி. ‘இன்று முதல் நீ பிராமணன்’ என்று சொல்லி அனுப்பினார். இதைக் கண்டு செல்லம்மா மனம் நொறுங்கினார்.
அடுத்த சில நாட்களில் இளைய மகள் சகுந்தலாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராக தன் கணவன் செய்த செயலே இதற்கு காரணம் என செல்லம்மா அழுதார். ஒரு வழியாக காய்ச்சல் குணமானதும் பாரதி, தமக்கு மிகவும் பிடித்த பராசக்தியிடம் கோபமாக பேசினார்...
‘பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன் மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்து விடக் கூடாதா?. முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய் விட்டது. இரண்டு மாத காலம் இரவும், பகலுமாக நானும் செல்லமாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ! உன்னை வாழ்த்துகிறேன்’.
‘கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!’
‘பராசக்தீ! ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன் களெல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும், என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க. நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை இல்லாதபடி அற்புதமான ஒளிச்சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டு ஒன்றை என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்’.
‘தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக்கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?’
பாரதியின் கோபத்தில் இருந்த நியாயத்தை பராசக்தி புரிந்து கொண்டது போல தெரியவில்லை.
பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எல்லாவற்றையும் தாண்டி பாரதி செய்த ஒரு வேலை செல்லம்மாவை ஆத்திரத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பெரியம்மா வீட்டில் வளர்ந்து 12 வயதான பிறகு சொந்த வீட்டுக்கு வந்த மூத்த மகள் தங்கம்மாவை வேறு சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க பாரதி விரும்பினார்.
இதை அறிந்த செல்லம்மா, இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு சொல்லாமல், கொள்ளாமல் தன் தாய் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். புதுவைக்குப் போன ஆரம்பத்தில் சொந்த ஊரான கடையத்திற்கு தனியாக போவதற்கு செல்லம்மா பயப்படுவார். அதற்காகவே கூட ஒருவரை அனுப்பி விட்டுவிட்டு வரச்சொல்வார் பாரதி.
எப்போதும் அவரது குடும்பத்தை வேவு பார்ப்பதற்கு பிரிட்டிஷ் போலீசார் பின்னாலேயே சுற்றி வந்ததால், நாளடைவில் பாதுகாப்புக்கு ஒருவர் எதற்கு என்று தனியாகவே சென்று வர ஆரம்பித்தார். அப்படிதான் இப்போதும் புறப்பட்டு போய்விட்டார்.
செல்லம்மா இல்லாமல் பாரதி தவித்து போனார். பாரதி மீது வெறித்தனமான நேசம் கொண்டு ஒரு சேவகனைப்போல இருந்த கிருஷ்ணமாச்சாரி எனும் குவளை கண்ணன் கவனித்துகொண்டார். ஆனாலும் கவலையால் பாரதி உடல் மெலிந்து போனார். தாடி வைத்தார். (பாரதி தாடியோடு இருக்கும் படம் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்டதுதான்).
பாரதியின் நிலை பற்றி செல்லம்மாவுக்கு குவளை கண்ணன் கடிதம் எழுதினார். உடனே அடித்து பிடித்து ஓடி வந்தார். மூத்த மகளை மட்டும் கடையத்திலேயே விட்டுவிட்டு இளைய மகளை மட்டும் அழைத்து வந்திருந்தார். பாரதிக்கு இது பெரும் வருத்தத்தைத் தந்தது. தன் மீது நம்பிக்கை இல்லாமல்தான் செல்லம்மா மகளை ஊரில் தங்க வைத்துவிட்டதாக நினைத்தார். கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். ரெயில் நிலையத்தில் அவரைக் கண்டுபிடித்த பாரதிதாசன் சமாதானப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
நாளொரு களேபரங்களுக்கு மத்தியில் நடந்த புதுச்சேரி வாழ்க்கை பாரதிக்கு மட்டுமல்ல; குடும்பத்தாருக்குமே சலிப்பை ஏற்படுத்தியது. ‘எத்தனை நாட்களுக்குதான் காவல்துறைக்கு அஞ்சியும், அவர்கள் கொடுக்கிற தொல்லைகளைத் தாங்கியும் வாழ்வது? நடப்பதை எதிர்கொண்டு சென்னைக்குப் போய்விட்டால் ஜீவனத்திற்கு வழி தேடிக்கொள்ளலாம்’ என்று முடிவெடுத்தார்கள். சாமான்களை இரு ஜட்கா வண்டிகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு பத்தாண்டு கால புதுச்சேரி வாழ்க்கையை முடித்துவிட்டு புறப்பட்டார்கள். ஆனால் சென்னைக்குப் போகமுடியாமல் கடையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்? செல்லம்மாவின் கடைசி காலம் எப்படி இருந்தது?
(ரகசியங்கள் தொடரும்)
மிருக ராஜாவும், கவிராஜாவும்!
மைசூர் விலங்குகாட்சிச் சாலைக்கு ஒரு முறை சென்றார்கள். அங்கே சிங்கம் இருந்ததைப் பார்த்துவிட்டு பாரதிக்கு உற்சாகம் பிறந்தது. சுற்றியிருந்தவர்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அதன் அருகே நெருங்கிப்போனார்.
‘மிருகராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும், வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்களென்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜா’ என்றார் பாரதி.
உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிடம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும் வரை அரை மணி நேரம் சிங்கத்தைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவினார். அதுவரை பயத்தால் நடுங்கியபடி கடவுளை வேண்டிக்கொண்டிருந்த செல்லம்மாவின் வற்புறுத்தலினால் சிங்கத்தின் வாயில் மட்டும் கையை வைக்காமல் அதனிடம் இருந்து விடை பெற்று வந்தார் பாரதி.
Related Tags :
Next Story