விநோதமான நம்பிக்கை


விநோதமான நம்பிக்கை
x
தினத்தந்தி 8 July 2017 4:05 PM IST (Updated: 8 July 2017 4:05 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பானில் ஒரு விநோதமான பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

ப்பானில் ஒரு விநோதமான பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது! விலை உயர்ந்த ஸ்ட்ராபெரி பழங்களை பரிசாகக் கொடுத்தால், அவர்களின் காதல் கைகூடும் என்ற விநோத நம்பிக்கையை கிளப்பியிருக் கிறார்கள். இந்த விநோத நம்பிக்கையின் விலை எவ்வளவு தெரியுமா? ரூ.1500. ஆமாங்க..! அந்த விலை உயர்ந்த ஒரு ஸ்ட்ராபெரியின் மதிப்பு தான் இது. இதனால் காதலர்களை குறிவைத்து ஏராளமான ஸ்ட்ராபெரி பழங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

ஜப்பானில் விளைவிக்கப்படும் அரிய வகை கோடோகா ஸ்ட்ராபெரி பழங்கள் குறைவான அளவில் விளைவிக்கப்பட்டு கைகளால் பறிக்கப்படுகின்றன. இதனால் இந்த வகை ஸ்ட்ராபெரி பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் மற்ற ஸ்ட்ராபெரிகளை விட இனிப்பு சுவையும் இதில் அதிகம் என்பதால், யானை விலைக்கும், குதிரை விலைக்கும் விற்கப்படுகிறது. சமீபகாலமாக மந்தமாக நகர்ந்து வந்த கோடோகா ஸ்ட்ராபெரி விற்பனை, கடந்த வாரத்தில் இருந்து புதுவேகம் எடுத்திருக்கிறது. ஏனெனில் காதலையும், காதலர்களையும் இந்த ஸ்ட்ராபெரி பழத்துடன் இணைத்து கதைவிட்டதால், அதை நம்பி இந்த வகை ஸ்ட்ராபெரி பழங்களை பலரும் வாங்கிச் செல்கிறார்கள்.
1 More update

Next Story