சாலை விபத்து பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை விபத்து பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 July 2017 2:45 AM IST (Updated: 8 July 2017 8:05 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நடந்த சாலை விபத்து பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர்,

வேலூரில் நடந்த சாலை விபத்து பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக எலும்பு முறிவு மருத்துவ சங்கம் மற்றும் வேலூர் மாவட்ட எலும்பு முறிவு மருத்துவ சங்கம் சார்பில் சாலை விபத்து பாதுகாப்பு குறித்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு எலும்பு முறிவு மருத்துவர் சங்க தலைவர் ரமேஷ்பாபு, ஊர்காவல் படை உதவி கமாண்டன்ட் ஜெனரல் இக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸ் சூப்பிரண்டு பகவலன் வழங்கினார். பின்னர் அவர், போலீசார் கலந்துகொண்ட மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று கோட்டையில் நிறைவடைந்தது. இதில் போலீசார் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி, சாலை பாதுகாப்பு, ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம், செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது, மதுஅருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கொண்டு சென்றனர்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவழகன், ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் இந்தர்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story