ஆக்கிரமிப்பில் இருந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே மழலையர் பள்ளிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கட்டிடம் தற்போது புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் தெரிகிறது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே மழலையர் பள்ளிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கட்டிடம் தற்போது புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிக்கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நகர்நல அதிகாரி கெபின்ஜாய் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று மதியம் ஆக்கிரமிப்பில் இருந்த பள்ளிக் கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
Related Tags :
Next Story






