வாசுதேவநல்லூரில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் பூங்கோதை எம்.எல்.ஏ. வழங்கினார்


வாசுதேவநல்லூரில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்  பூங்கோதை எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 9 July 2017 2:30 AM IST (Updated: 9 July 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் ஒன்றிய தி.மு.க சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூர் ஒன்றிய தி.மு.க சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது.

ஒன்றிய செயலாளர் பொன்முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சவுக்கை சீனிவாசன், மாவட்ட துணைச்செயலாளர் மாடசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் பேரூர் கழகச் செயலாளர் சரவணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பூங்கோதை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1–ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள ஏழை எளிய மாணவர்கள் 100 பேருக்கு இலவச புத்தகபைகள், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தீர்மானக் குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், ஒன்றிய துணைச்செயலாளர் மாரித்துரை, புளியங்குடி நகர செயலாளர் வக்கீல் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சுப்பையா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story