அனைத்து துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு உதவியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


அனைத்து துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு உதவியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திருவாரூரில் நடந்த அரசு உதவியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தஞ்சை மண்டல கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகூரான் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் வெங்கடேசன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் பெருமாள், ஆரோக்கியராஜ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கோபால், ஆதிதிராவிட விடுதி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் கணேசன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-


7-வது ஊதியக்குழுவை காலம் தாழ்த்தாமல் அரசு அமல்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 50 சதவீத அகலவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்து 20 சதவீதம் இடைகால நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசு அனைத்து துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு அலுவலர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story