நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி, 381 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கின பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், ‘‘இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 17 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது நமது மிகப்பெரிய சொத்து ஆகும். தரமான கல்வியை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அறிவையும், ஆற்றலையும் சரியான முறையில் வார்த்தெடுக்க முடியும். உள்கட்டமைப்பு திட்டங்களான சாலை அமைத்தல், கப்பல் கட்டுமானம், விமான நிலையம் அமைத்தல், நகரம் மேம்படுத்துதல், நதிகள் இணைத்தல் மற்றும் மின் ஆற்றல் உருவாக்குதல் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதில் நாம் கற்ற உயர் கல்வியை பயன்படுத்தி மேன்மை அடைய வேண்டும்’’ என்றார்.
இந்த விழாவில் கல்லூரி முதல்வர் இந்திரா கெத்சி டேவிட்,ல் துணை முதல்வர் சித்தார்த் உள்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.