கீழ்வேளூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழ்வேளூர்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தீபாம்பாள் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணியினையும், மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் அறையுடன் கூடிய 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், அகரக்கடம்பனூர் ஊராட்சியில் விவசாயிகளின் பங்களிப்போடு தூர்வாரப்பட்டுள்ள பறவைக்குளம், பெரிய குளம் ஆகிய குளங்களையும், பிரதம மந்திரி கிராம சாலை அபிவிருத்தி் திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் அகரக்கடம்பனூர் சாலை மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைதொடர்ந்து, அத்திப்புலியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் கழிவறை, ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை, ரூ. 3.15 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் கட்டுமான பணிகளையும், ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், அன்பரசு, கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவா, ஒன்றிய பொறியாளர் வெற்றிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story