பெங்களூருவில் சுதந்திர தினத்தன்று 198 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் அன்றாடம் தங்கள் உணவிற்கே கஷ்டப்படுகின்றனர்.

மலிவு விலை உணவகம்
தனியார் அமைப்பின் ஆய்வின் படி இந்தியாவில் 20 சதவீத ஏழை மக்கள் தினமும் ஒருவேளை உணவுடன் தங்கள் அன்றாட வாழ்க்கையை கழிப்பதாக தெரிவிக்கிறது. இதை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் இலவச அரிசி, கோதுமை உள்பட பல்வேறு பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடை மூலம் மக்களுக்கு வழங்கி வருகின்றது. ஆனாலும் இன்னும் நமது நாட்டில் பட்டினியில் சாகும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலிவு விலையில் மக்களுக்கு உணவு அளிக்கும் விதமாக அம்மா உணவகத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். இதற்கு கிடைத்த ஆதரவை கண்டு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அம்மா உணவகம் தொடங்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
‘இந்திரா கேண்டீன்’
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு சித்த ராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க ஏற்பாடு செய்து வருகின்றது.
இந்த உணவகத்திற்கு ‘இந்திரா கேண்டீன்’ என மாநில அரசு பெயர் வைத்து உள்ளது.
மேலும் இந்த உணவகங்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி(சுதந்திர தினம்) தொடங்கி வைக்கப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். இதையடுத்து பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகளிலும் இந்திரா கேண்டீன் அமைக்க தேவையான இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து இந்திரா கேண்டீன் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இட்லி, பொங்கல், புளி சாதம்...
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகளிலும் ரூ.28.50 லட்சம் செலவில் இந்திரா கேண்டீன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கேண்டீன்கள் அமைக்க தேவையான சில கட்டிட பொருட்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இந்த கேண்டீனில் காலை உணவாக இட்லி, புளி சாதம், பொங்கல், மதியம் சாப்பாடு, தயிர், பருப்பு குழம்பு, இரவு தக்காளி சாதம், புளிசாதம், புதினா சாதம் போன்றவை வழங்கப்பட உள்ளது. இந்த உணவுகளை சுவையாகவும், சுத்தமாகவும் தயார் செய்ய டெண்டர்கள் கோரப்பட்டது. தற்போது அந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த டெண்டரின் போது பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.
சுதந்திர தினத்தன்று திறக்கப்படும்
அதாவது உணவகத்தில் உணவு சாப்பிட வரும் மக்களிடம் மரியாதையாக பதில் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நேரமும் சுமார் 600 பேருக்கு உணவு தயாராக இருக்கவேண்டும். மேலும் உணவு உண்பவர்களுக்கு தூய்மையான தண்ணீர் வழங்கவேண்டும். அதேபோல் உணவகத்தை தூய்மையாக பராமரிக்காத ஒப்பந்ததாரரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
தற்போது வரை 55 இந்திரா கேண்டீன்கள் தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள இடங்களில் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம்(ஆகஸ்டு) 4-ந் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடைந்து, ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கேண்டீன்கள் அனைத்தும் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story