பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் பணம் ‘அபேஸ்’ செய்த பெண் கைது


பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் பணம் ‘அபேஸ்’ செய்த பெண் கைது
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் பணம் ‘அபேஸ்’ செய்த பெண் கைது

வாழப்பாடி,


வாழப்பாடி அய்யாக்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(வயது48). இவர் மேட்டுப்பட்டி பெருமாபாளையத்திலுள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதற்காக, நேற்றுமுன்தினம் மதியம் வாழப்பாடி பஸ்நிலையத்தில் பஸ்சுக்கு காத்து நின்றார். அப்போது அங்குவந்த பெண் ஒருவர், ஜெயஸ்ரீ கைப்பையில் வைத்திருந்த 700 ரூபாயை அபேஸ் செய்து விட்டு தப்பிச்செல்ல முயன்றார்.

இதை ஜெயஸ்ரீ அறிந்து கூச்சல் போட்டார். அதையொட்டி அங்குள்ள பொதுமக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் அயோத்தியாப்பட்டணம் அடுத்த விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மனைவி சரசு(50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story