சரக்கு, சேவை வரி விதிப்பை கண்டித்து கிரானைட் நிறுவனங்கள் மூடப்பட்டன
சரக்கு, சேவை வரி விதிப்பை கண்டித்து சூளகிரியில் 100-க்கும் மேற்பட்ட கிரானைட் நிறுவனங்கள் மூடப்பட்டன.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சூளகிரி, கோனேரிப்பள்ளி, சப்படி, காமன்தொட்டி, அட்டகுறுக்கி உள்ளிட்ட இடங்களில் 125 கிரானைட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி 14 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்ந்திருப்பதால் கிரானைட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 6000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கிரானைட் நிறுவனத்தினர் தெரிவித்தனர். மேலும் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறினர். அதன்படி நேற்று சூளகிரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிரானைட் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதுகுறித்து விவாதிப்பதற்காக, சூளகிரி கிரானைட் தொழிற்சாலைகள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சூளகிரி அருகே அட்டகுறுக்கி என்ற இடத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு, சங்க தலைவர் பூஷங்கர் ரெட்டி தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் மன்மோகன், துணை செயலாளர் மோகன் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பிரதீப் சுதானி வரவேற்று பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பூஷங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு கடுமையாக உள்ளது. முன்பு 14 சதவீதமாக இருந்த வரியை, தற்போது 2 மடங்காக உயர்த்தியிருப்பதால், கிரானைட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 6000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அதிகபட்சம் 12 சதவீதமாக மாற்றியமைக்குமாறு வலியுறுத்தி, சூளகிரி பகுதியில் உள்ள அனைத்து கிரானைட் நிறுவனங்களையும் இன்று(நேற்று) முதல் 3 நாட்களுக்கு மூடி எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.
இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி அளவில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, 3 நாட்களுக்கும் 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். அத்துடன் மறைமுக நஷ்டமும் ஏற்படும். ஆகவே மத்திய அரசு எங்கள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, தற்போது விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத வரியை குறைத்து, 12 சதவீத வரியை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story