காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
போச்சம்பள்ளி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் நடைபெற்று வரும் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டார்.
மத்தூர்,
போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி அருகே உள்ள கள்ளியூரில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார்.
இதன் பிறகு கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்ததை தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அமைக்கப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் குடிநீர் தொட்டிகளில் தடுப்பு மருந்துகள் தெளிக்கும் பணி மற்றும் நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்துகளை தெளித்தல், கழிவுநீர் கால்வாய்களை பராமரித்தல் போன்ற விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் உருவாகாத வகையில் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் கால்நடைகள் உள்ள இடங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மருத்துவ குழுவிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருண், போச்சம்பள்ளி தாசில்தார் பண்டரிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ் அகமது மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story