கரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 686 வழக்குகளுக்கு சமரச தீர்வு


கரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 686 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 9 July 2017 4:30 AM IST (Updated: 9 July 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 686 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் உரியவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.14 கோடியே 17 லட்சம் வழங்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

தலைமை குற்றவியல் நீதிபதி பார்த்தசாரதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தங்கவேல், முதன்மை சார்பு நீதிபதி மணி, கூடுதல் சார்பு நீதிபதி சத்யதாரா மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


மொத்தம் 3 அமர்வுகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், வங்கி காசோலை வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 8 ஆயிரத்து 938 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 686 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் மொத்தம் ரூ.14 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 614 இழப்பீட்டு தொகையாக உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. 

Next Story