ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 90 பேர் காயம்
ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 90 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில், மாவட்ட கலெக்டர் கணேஷ் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,189 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. சுமார் 550 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.
இதில் சில காளைகள் அடக்க வந்த மாடுபிடி வீரர்களை கொம்புகளால் முட்டி தூக்கி வீசி பந்தாடின. சில காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தன. மேலும் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்பட 90 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 12 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்ளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கலெக்டர் கணேஷ், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஜெயபாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான், முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story