தந்தையின் நண்பர் உள்பட 4 பேரால் 15 வயது சிறுமி கற்பழிப்பு 3 பேர் கைது

தந்தையின் நண்பர் உள்பட 4 பேரால் 15 வயது சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
தந்தையின் நண்பர் உள்பட 4 பேரால் 15 வயது சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தந்தையின் நண்பர்மும்பை புறநகர் பகுதியான தாம்பேயில் 15 வயது சிறுமி ஒரு தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் சிறுமியிடம் நைசாக பேச்சுகொடுத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றார்.
மும்பையில் உள்ள பாண்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்ற அவர் அங்குள்ள தனது நண்பர் வீட்டில் வைத்து அவளை வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.
3 பேர் கைதுஅத்துடன் தனது நண்பர்கள் 3 பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்கினார். இரவு முழுவதும் அந்த வீட்டிலேயே சிறுமியை அடைத்து வைத்த அவர்கள், காலையில் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்கு சென்ற சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கற்பழித்த 3 பேரை கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார் அவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.






