பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி பணம் கொள்ளை

தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தாம்பரம்,
தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சுந்தரம் (வயது 30) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுந்தரம் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், திடீரென சுந்தரத்தை கத்தியால் வெட்டினர். உடனே அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
அந்த பையில் ரூ.12 ஆயிரம் இருந்தது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்துடன் தப்பிய 6 பேரை தேடி வருகின்றனர். ஊழியர் சுந்தரத்திற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






