வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 9 July 2017 3:57 AM IST (Updated: 9 July 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான டி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின்படி 1.1.2017 அன்றைய தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான சிறப்பு பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணைய அறிவுரையின்படி 9-ந் தேதியான இன்றும், 23-ந் தேதியும் என 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே, 18 முதல் 21 வயதுடைய இளம் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சிறப்பு முகாம் நாட்களில் பங்கேற்று இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story