சென்னை துறைமுக ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் சென்னை துறைமுக ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சைமன். சென்னை துறைமுக ஊழியர். இவரது மனைவி திவ்யா (வயது 32). நேற்று மதியம் திவ்யா வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மாலையில் திவ்யா வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.6 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து திவ்யா செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story