டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2017 3:45 AM IST (Updated: 10 July 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரில் இருந்து மூளிப்பட்டி செல்லும் சாலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரில் இருந்து மூளிப்பட்டி செல்லும் சாலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, ஆமத்தூர், நாட்டார் மங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் வழியில் இந்த கடை உள்ளது எனக்கூறி, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story