குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 10 July 2017 3:30 AM IST (Updated: 10 July 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம், காந்திநகரை சேர்ந்தவர் தமிழரசன் என்ற வெள்ளையன் மீது கொலை வழக்கு, 3 வழிப்பறி மற்றும் ஒரு திருட்டு வழக்கு உள்ளது.

திருவள்ளூர்,

செங்குன்றம், காந்திநகரை சேர்ந்தவர் தமிழரசன் என்ற வெள்ளையன் (வயது 26). இவர் மீது, ஒரு கொலை வழக்கு, 3 வழிப்பறி மற்றும் ஒரு திருட்டு வழக்கு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பரிந்துரை செய்தார்.

இதையடுத்து தமிழரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் (பொறுப்பு) முத்து உத்தரவிட்டார்.


Next Story