ஆபாச வீடியோ படத்தைக் காட்டி காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தடகள வீரர் கைது
தன்னுடன் நெருக்கமாக இணைந்து இருக்கும் ஆபாச வீடியோ படத்தைக் காட்டி காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தடகள வீரர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 22 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்தப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தடகள பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
நான் தினமும் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபடுவேன். என்னோடு பயிற்சியில் ஈடுபட்ட தடகள வீரர் தீபக் என்ற டேனியோடு (22) எனக்கு காதல் மலர்ந்தது. இருவரும் நெருங்கிப் பழகினோம். என்னை திருமணம் செய்துகொள்வதாக அவர் ஆசைவார்த்தைக் காட்டினார்.
இருவரும் தனியாக இருந்த ஒரு தருணத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை மயக்கி என்னோடு உல்லாசம் அனுபவித்துவிட்டார். நாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த காட்சியை கேமரா மூலம் வீடியோ படமும் எடுத்துள்ளார்.
இந்த விஷயம் எனக்கு தெரியவந்ததும் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். அவரோடு உள்ள காதலை முறித்துக்கொண்டேன். அவரை விட்டும் பிரிந்துவிட்டேன். இந்த நிலையில் எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்தது.
எனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை தெரிந்து கொண்ட தீபக் என்னை மிரட்டினார். அவருடன் நான் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு ஆபாச வீடியோ படங்களை அனுப்பி திருமணத்தையும் தீபக் தடுத்து நிறுத்திவிட்டார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தீபக் நேற்று கைது செய்யப்பட்டார். தீபக் சென்னை டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர். அவரும் பட்டப்படிப்பு படித்துள்ளார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story