உடையார்பாளையம், ஆண்டிமடத்தில் வாக்காளர் சேர்ப்பு பணிக்கான முகாம்


உடையார்பாளையம், ஆண்டிமடத்தில் வாக்காளர் சேர்ப்பு பணிக்கான முகாம்
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 10 July 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம், ஆண்டிமடத்தில் வாக்காளர் சேர்ப்பு பணிக்கான முகாம்

வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 508 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 729 பெண் வாக்காளர்கள் என மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 237 பேர் உள்ளனர். உடையார்பாளையம் தாலுகாவில் 178 வாக்குச்சாவடி மையங் களும், புதிதாக பிரிக்கப்பட்ட ஆண்டிமடம் தாலுகாவில் 111 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த மையங்களில் நேற்று தீவிர வாக்காளர் சேர்ப்பு பணிக்கான முகாம் நடைபெற்றது. முகாமில் 18 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்றது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. முகாமை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டீனாகுமாரி ஆய்வு செய்தார். தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் ஆனந்தன், ஜெயங்கொண்டம் வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story