கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருப்பதால் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.
மேட்டூர்,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த மாதம் 30-ந்தேதி 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 7-ந்தேதி தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வந்தது. மதியம் 12 மணிக்கு 1,000 கனஅடியாக உயர்ந்தது. நேற்று காலை 8 மணிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1,912 கனஅடி வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 20.09 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 20.48 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

Related Tags :
Next Story