பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சீசன் சுமாராகவே உள்ளது. அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுவதால், சுற்றுலா பயணிகளும் கூட்டமும் குறைவாக உள்ளது. விடுமுறை நாட்களில் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தாலும், அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். நேற்றும் குற்றாலத்தில் சீசன் சுமாராகவே இருந்தது. இதனால் குற்றாலத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடையும் சுற்றுலா பயணிகள், பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்து வந்தனர். இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று ஆனந்தமாக குளித்துச் சென்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி, மலைப் பகுதிகளில் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்படுத்தினர்.
அருவி பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். இதனால் பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலும் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கு பத்து பத்து வாகனங்களாக அனுப்பப்பட்டன. இதே போல் பாபநாசம் தலையணை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குளித்து மகிழ்ந்தனர்.

Related Tags :
Next Story