சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை


சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2017 3:15 AM IST (Updated: 11 July 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

பள்ளபாளையம் ஊராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை,

உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நந்தகோபால், பொதுச்செயலாளர் குணசேகரன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பள்ளப்பாளையம் ஊராட்சி செல்லாண்டியம்மன் காலனியில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குழாய்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். அத்துடன் பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்க வேண்டும். பொதுக்கழிப்பிடம் கட்டித்தரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story