அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்கம் செய்ய வேண்டும்


அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 11 July 2017 3:45 AM IST (Updated: 11 July 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன மாநில பொதுக்குழு கூட்டம் ஆரணியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில சம்மேளன தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார்.

ஆரணி,

மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாலுகா நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எஸ்.குமார் வரவேற்றார். மாநில சம்மேளன செயலாளர் சி.எ.மோகன் செயலறிக்கையும், மாநில பொருளாளர் சி.டி.சுப்பிரமணியம் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர்.

கூட்டத்தில், அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க முன்னாள் தலைவர் மோகன்ராஜ், அப்பாண்டைராஜ், மாவட்ட துணைத்தலைவர் பாபு மற்றும் ஆரணி, களம்பூர், போளூர், செங்கம் மற்றும் 17 மாவட்டங்களில் இருந்து நெல், அரிசி வியாபாரிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.



Next Story