குடிநீர், பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் மலைவாழ் மக்கள் கோரிக்கை
குடிநீர், பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது காளியாபுரம் அருகே உள்ள செல்லப்பிள்ளைகரடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செல்லப்பிள்ளைகரட்டில் 120 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகிறோம். கடும் வறட்சியால் இங்கு உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. பின்னர் ஊராட்சி நிர்வாகம் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்தது. 2 மாதமாகியும் மோட்டார் அமைக்காமல் கிடப்பில் கிடக்கிறது. ஊராட்சி மூலம் லாரி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அதையும் நிறுத்தி விட்டனர். குடிநீர் எடுக்க பல கிலோ மீட்டர் தூரம் சென்று எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. 15 குடும்பங்களுக்கு மேல் பட்டா இல்லாமல் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி மற்றும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொள்ளாச்சியில் இருந்து செல்லப்பிள்ளைகரட்டுக்கு தடம் எண் 17 அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் செல்லப்பிள்ளைகரட்டில் தார் சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்பதால், அரசு பஸ் தெக்கோட்டுகால்வாய் வரை வந்து திரும்பி செல்கிறது.
இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்சிற்காக தெக்கோட்டு கால்வாய் வரை நடந்து வர வேண்டிய உள்ளது. மேலும் காலை 7 மணிக்கு வந்து செல்வதால், பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தார் சாலை பணிகளை விரைந்து முடித்து பஸ் வசதி செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொள்ளுப்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திப்பம்பட்டியில் இருந்து செல்லப்பம்பாளையம் செல்லும் சாலையில் கொள்ளுப்பாளையத்தில் ரெயில்வே கீழ்மட்ட பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் குறுகலாக அமைப்பதால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும். இதுகுறித்து கோரிக்கை மனு கொடுத்ததால் அதிகாரிகள் வாய்மொழியாக இருவழிசாலையாக மாற்றி தருவதாக கூறினார்கள்.
தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தென்னை சார்ந்த பொருட்கள், விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு வைக்கோல் போன்ற மாட்டு தீவனங்கள் எடுத்து செல்லும் லாரிகள் இந்த வழியாக செல்ல இயலாத நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையை அகலப்படுத்தி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Tags :
Next Story