சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
14 வயது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் ஒருவர் கற்பழித்து உள்ளார்.
மும்பை,
போரிவிலியில் வசித்து வரும் 14 வயது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் ஒருவர் கற்பழித்து உள்ளார். டிசம்பர் மாதம் அவர் கர்ப்பமாக இருப்பது ஆஸ்பத்திரியில் பரிசோதனையின் போது தெரியவந்தது.
அவளை கற்பழித்த ஆசாமியை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வந்தனர். பின்னர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அகிலேஷ் (வயது20) என்ற வாலிபர் தான் கற்பழித்தது தெரியவந்தது.
இருப்பினும் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் அவரை வலைவீசி தேடினர். இந்த நிலையில், அவர் உத்தரபிரதேச மாநிலம் விஸ்ராம்பூர் கிராமத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டார்.