உயர் மின்கோபுரத்தில் ஏறி நிர்வாணமாக நின்ற தொழிலாளி
உயர்மின் கோபுரத்தில் ஏறி தொழிலாளி நிர்வாணமாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை அவரது மகன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு இந்திராநகரை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் சுரேஷ் வந்தவாசியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரில் படித்து வருகிறார்.
நாகேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க குடும்பத்தினர் நல்லான்பிள்ளைபெற்றார் என்ற கிராமத்திற்கு அழைத்து தாயத்து கயிறு ஒன்றை நாகேஷின் கையில் கட்டி உள்ளனர். இதையடுத்து அவர், குடிப்பதை நிறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கையில் கட்டப்பட்டிருந்த தாயத்து கயிறு அறுபட்டுள்ளது. இதையடுத்து நாகேஷ் மீண்டும் குடிக்க தொடங்கினார்.
நிர்வாணமாக...இந்த நிலையில் நேற்று அவர் பெரியநொழப்பை என்ற கிராமத்துக்கு செல்லும் சாலை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து மண் எடுக்கும் பணிக்கு சென்றிருந்தார். பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென நாகேஷ் அங்கிருந்து ஓடினார். சற்று தொலைவில் 60 அடி உயரமுள்ள உயர்மின்கோபுரத்துக்கு கீழ் சென்ற அவர் தான் அணிந்திருந்த உடைகளை கழற்றினார். ஓடினார். அங்குள்ள சுமார் 60 கொண்ட மின்கோபுரத்தின் கீழே நின்று அணைத்து உடைகளையும் கழற்றி போட்டுள்ளார். தொடர்ந்து அவர் நிர்வாணமாக அந்த மின்கோபுரத்தின் மேல் திடீரென ஏறி அதன் உச்சிக்கே சென்றார்.
இதனைப்பார்த்த சக தொழிலாளர்கள் அவரை கீழே வருமாறு சத்தம்போட்டு அழைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ், தீயணைப்பு நிலையம், தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயர்மின்கோபுரத்தில் ஏறிய நாகேஷை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அவரது மகன் சுரேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர் தீயணைப்பு வீரர்களுடன் மின்கோபுரத்தில் மேல் ஏறி தந்தையிடம் பேச்சுக்கொடுத்தார்.
கயிறு கட்டிதொடர்ந்து சுரேஷின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அவரது தந்தை நாகேஷை கயிறு கட்டி மீட்டு கீழே கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில் ரமேஷ் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதால் இவ்வாறு நடந்து கொண்டார் என்றனர். மேலும் இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.