உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேட்டி


உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 11 July 2017 4:30 AM IST (Updated: 11 July 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

அணைக்கட்டு,

வேலூரை அடுத்த மேல்மொணவூர் மார்கெட் திடலில் 16–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி,எஸ்.டி. வரியால் விலைவாசி கண்டிப்பாக உயரும். விவசாயிகளின் விலை பொருட்களுக்கு 5 முதல் 12, 18, 28 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டி வருகின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல்...

தமிழகத்தில் உள்ள ஏரிகளில் 3–வது பெரிய ஏரி காவேரிப்பாக்கத்தில் உள்ள ஏரி. உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக வேலூர் மாவட்டம் உள்ளது. 13 சட்டமன்ற தொகுதிகளை அடங்கிய மாவட்டம், சுகாதாரத்தில் பின்தங்கி உள்ளது. ஆகஸ்டு 1–ந் தேதி தமிழகத்தை பூரண மதுவிலக்கு மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி வேலு, மாநில துணை பொது செயலாளர் இளவழகன், துணைத்தலைவர் என்டி.சண்முகம், மாநில துணை பொது செயலாளர்கள், பொன்னுசாமி, சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, முன்னாள் மாநில துணை செயலாளர் எம்.கே.முரளி, எதிரொலிமணி, கரிகாலன், கிருஷ்ணன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சசிக்குமார், என்.செங்குட்டுவன், அக்னி வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story