‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி பொதுநல அமைப்பினர் தொடர்முழக்க போராட்டம்


‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி பொதுநல அமைப்பினர் தொடர்முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நேற்று 10–வது நாளாக தன்னார்வ மற்றும் பொதுநல அமைப்பினர் தொடர்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நேற்று 10–வது நாளாக தன்னார்வ மற்றும் பொதுநல அமைப்பினர் தொடர்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நான்கு சக்கர வாகன விற்பனையாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இக்பால், கவுரவ தலைவர் வரதராஜன், தன்னார்வ மற்றும் பொதுநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய குழு, தமிழக அரசு பரிந்துரை செய்த செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவேண்டும், டெல்டா மாவட்டத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவை, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் வரை ஓயமாட்டோம் என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் வக்கீல் கோ.அன்பரசன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ஆதி.நெடுஞ்செழியன், பொதுச்செயலாளர் அக்ரி செல்வராஜ், இணைச் செயலாளர் ராமதாஸ், மக்கள் நல பேரவை செய்திதொடர்பாளர் இராம.சந்திரசேகரன் மற்றும் தன்னார்வ, பொதுநல அமைப்பை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story