சரக்கு, சேவை வரியை ரத்து செய்யக்கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜவுளிக்கான சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
குருசாமிபாளையம் சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மல்லசமுத்திரம் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஜவுளி தொழிலுக்கு விதிக்கப்பட்டு உள்ள சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் குருசாமிபாளையம் சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
குருசாமிபாளையம் பகுதியில் சுமார் 1,200 விசைத்தறிகள் மற்றும் 250 நவீன மயமாக்கப்பட்ட தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலில் சுமார் 7,500 பேர் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு இதுதான் வாழ்வாதாரம். எனவே மத்திய, மாநில அரசுகள் ஜவுளி தொழிலுக்கு விதித்து உள்ள சரக்கு மற்றும் சேவை வரியை முழுமையாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இதேபோல் மல்லசமுத்திரம் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
மல்லசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் 3 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் கரூர், சேலம், ஈரோடு பகுதிகளில் இருந்து நூல் வாங்கி வந்து கூலிக்கு உற்பத்தி செய்து கொடுத்து வருகிறோம்.
தற்போது மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியால் எங்களால் தொழில்செய்ய இயலவில்லை. கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்து எங்களது தொழிலை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
85.ஆர். கொமாரபாளையம் ராஜகணபதி சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
85.ஆர்.கொமாரபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் சிறு விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தற்போது மத்திய, மாநில அரசுகள் எங்களது தொழில் மேல் சரக்கு மற்றும் சேவை வரியை திணித்து உள்ளதால், தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளோம். வெளியூருக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஜவுளி தொழிலுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை நீக்கி, எங்கள் குடும்பங்களை வாழ வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இதேபோல சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பில் இருந்து ஜவுளி துறைக்கு விலக்கு அளிக்க கோரி வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், நெ.3. குமாரபாளையம் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

Related Tags :
Next Story