குளத்தை தூர்வாரியபோது அம்மன் சிலை கண்டெடுப்பு


குளத்தை தூர்வாரியபோது அம்மன் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 11 July 2017 4:30 AM IST (Updated: 11 July 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

குளத்தை தூர்வாரியபோது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பனில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. பராமரிப்பின்றி கிடந்த அந்த குளத்தை தூர்வாரும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்தின் ஒரு பகுதியில் தோண்டியபோது, கடப்பாரை ஒரு பொருளின் மீது பட்டு சத்தம் கேட்டது.

இதையடுத்து கிராம மக்கள் அந்த இடத்தை மேலும் தோண்டினர். இதில் ஒரு அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கருங்கல்லால் செய்யப்பட்டிருந்த அந்த சிலை 2½ அடி உயரம் இருந்தது.

இந்த சிலையை கிராம மக்கள் மீட்டு குளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து சுத்தம் செய்து பூஜைகளை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் அன்பழகன், கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சிலையை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அம்மன் சிலை குடவாசல் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு அந்த சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story