ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னை மட்டைகள் மற்றும் கீற்றுகளை தீ வைத்து எரித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 90-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர், கதிராமங்கலத்தில் நடந்த போராட்டத்தின்போது தீ வைப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். அதேபோல் நெடுவாசல் போராட்ட களத்தையும் மாற்றிவிட வேண்டாம் என்பதை வலியுறுத்தி, போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தேங்காய் மட்டைகள் மற்றும் கீற்றுகளை போட்டு தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story