அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவ-மாணவிகள் உண்ணாவிரதம்
முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்,
அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் அடுத்துள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முள்ளுக்குறிச்சி கிராமம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு முடிந்ததும் மேல்நிலை கல்விக்காக 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறிச்சிகுளம், செந்துறை, பொன்பரப்பி மற்றும் அருகிலுள்ள கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பள்ளிகளை நாடவேண்டிய நிலையே உள்ளது. இதனால் மாணவிகள் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று மேல்நிலை கல்வி கற்க முடியாமல் படிப்பை கைவிடும் நிலை இருந்து வருகின்றது.
இதனால் அப்பகுதி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மேற்படிப்பிற்காக முள்ளுக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தி, மேல்நிலைப்பள்ளியாக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.
இதுநாள் வரை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் போராட் டத்தில் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:-
முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தினால் மாணவ- மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் குறுக்கே உள்ள வெள்ளாற்றை கடக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் வரத்தால் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்படும் போது கல்வி பாதிக்கும். முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக முள்ளுக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியை இந்த கல்வியாண்டே தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும். தங்களது பள்ளியை தரம் உயர்த்தும் வரை தங்களின் உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தளவாய் போலீசார் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் உண்ணாவிரத போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story