கேரளாவை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் மீது தாக்குதல்
மங்களூருவில் கேரளாவைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு
மங்களூருவில் கேரளாவைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ஷாஜித்(வயது 23). இவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குத்தாரு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7–ந் தேதி இரவு ஷாஜித் அடையாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது ஷாஜித்தை வழிமறித்த மர்மநபர்கள், அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் ஷாஜித்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஷாஜித் மங்களூரு புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜித்தை தாக்கிய மர்மநபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷாஜித்தை தாக்கியதாக அடையாறு பகுதியை சேர்ந்த நிதின் பூஜாரி(வயது 21), பிரனீஷ் பூஜாரி(20), கிஷான் பூஜாரி(21), ஆகிய 3 பேரையும் மங்களூரு புறநகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Related Tags :
Next Story