நுங்கம்பாக்கத்தில் விஷவாயு தாக்கி ஓட்டல் ஊழியர் பலி போலீஸ் விசாரணை
சென்னை நுங்கம்பாக்கத்தில் விஷவாயு தாக்கியதில் ஊழியர் ஒருவர் பலியானார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமகோபாலன்(வயது 55). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந்தேதி அந்த ஓட்டலில் உள்ள குடிநீர் தொட்டியை ராமகோபாலன் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ராமகோபாலனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊழியர் சாவு
இந்த நிலையில் நேற்று காலை ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் மோதியது
* புழல் பகுதியை சேர்ந்த தாமோதரன்(26) மோட்டார் சைக்கிளில் ஜி.என்.டி. சாலையில் சென்றபோது தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் மோதியதில் பலியானார்.
* நுங்கம்பாக்கத்தில் தனியார் மேன்சனில் வேலை பார்த்து வந்து காந்தியப்பன்(43) நேற்று இரவு பழுதான மின் மோட்டாரை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கியதில் இறந்தார்.
* அம்பத்தூரை சேர்ந்த விஜயகுமார்(47) நேற்று காரில் வந்தபோது கருக்குபகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் காரில் மோதியது தொடர்பாக அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கார் கண்ணாடியை உடைத்ததாக அஜீத்குமார்(18) சதீஷ்(18), விஜய்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடிவருகிறார்கள்.
பொதுமக்கள் சாலை மறியல்
* புளியந்தோப்பு சாலையில் கழிவுநீர் தேங்குவதாக கூறி பொதுமக்கள் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
* கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே நேற்றுமுன்தினம் பெய்த மழையில் நனைந்த முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
* அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் ராஜேந்திரன்(43) சம்மன் வழங்குவதற்காக சாதாரண உடையில் மண்ணூர்பேட்டைக்கு சென்றார். அங்கு அவரை தாக்கியதாக காளிதாஸ்(40), மகேஷ்குமார்(28) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
* அம்பத்தூரை சேர்ந்த சிறுமியை, அவரது உறவினரான திவாகர்(20) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நேற்று கைது செய்யப்பட்டார்.
கடலில் மூழ்கி வாலிபர் சாவு
* திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த அருள்குமார்(18) நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கடலில் தனது அண்ணனுடன் குளித்தபோது கடலில் மூழ்கி பலியானார்.
* வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(33) தனது ஆட்டோவை நள்ளிரவில் வீட்டு முன் நிறுத்தியிருந்தார் அவரது ஆட்டோவுக்கு மர்ம மனிதர்கள் தீவைத்து விட்டு தப்பினர்.
* சூளைமேடு பகுதியை சேர்ந்த திருமங்கை(65) நேற்று காலையில் நடைபயிற்சி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர்.
தாசில்தார் முற்றுகை
* பள்ளிக்கு வராததை ஆசிரியர் கண்டித்ததால் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சந்தோஷ்குமார் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
* முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு செய்ததாக தண்டையார்பேட்டை தாசில்தார் மோகனை முதியோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
* கிண்டி ரேஸ்கோர்சில் குதிரை பந்தயத்திற்காக கடலூரை சேர்ந்த ரங்கநாதன்(65) என்ற முதியவர் கள்ள 100 ரூபாய் நோட்டுகள் 6 கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Tags :
Next Story