294 உரக்கடைகளுக்கு விற்பனை முனைய எந்திரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 294 உரக்கடைகளுக்கு விற்பனை முனைய எந்திரத்தை கலெக்டர் வெங்கடேஷ் நேற்று வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 294 உரக்கடைகளுக்கு விற்பனை முனைய எந்திரத்தை கலெக்டர் வெங்கடேஷ் நேற்று வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 142 தனியார் உர விற்பனை நிலையங்களும், 152 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆக மொத்தம் 294 உரவிற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்களுக்கான விற்பனை முனைய எந்திரம் (பாயிண்ட் ஆப் சேல் எந்திரம்) வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, விற்பனை முனைய எந்திரங்களை வழங்கினார்.இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:–
மத்திய அரசு நேரடி உர மானிய திட்டத்தின் கீழ் ஆதார் அட்டையை பயன்படுத்தி விற்பனை முனைய எந்திரம் மூலம் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 1–8–17 முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 294 கடைகளில் விற்பனை முனைய எந்திரத்தை பயன்படுத்தி உரம் விற்பனை செய்யப்பட உள்ளது.இதன் மூலம் விவசாயிகள் அரசு அறிவித்து உள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் சரியான விலைக்கு உரங்களை பெற்று பயனடையலாம். விவசாயிகள் மண் மாதிரி பரிசோதனை பரிந்துரைப்படி அல்லது கிராம உரக்குறியீட்டின்படி, விவசாயிகள் தங்கள் தேவையின் அடிப்படையில் உரங்களை பெற்று பயனடையலாம். விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. வரும் காலங்களில் அனைத்து அரசு மானியம் பெறும் உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விவசாயிகளுக்கு நேரடி உர மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story