நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையாக ரூ.2.17 கோடி ஒதுக்கீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையாக ரூ.2.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையாக ரூ.2.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் 2016–17–ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்தில் நெல் பயிரிட்ட 1029 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த காப்பீட்டு தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் மணலை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விபத்துக்களை குறைக்க முடியும்.தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடந்து வருகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்காக இதுவரை சுமார் 7 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த மனுக்கள் உரிய பரிசீலனை செய்து பட்டியலில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் 2016–17–ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களில் ஊராட்சி செயலாளர்களுக்கான 20 சதவீதம ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு இளநிலை உதவியாளர்களாக பணிமாற்ற உத்தரவை கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.
Related Tags :
Next Story