ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிப் பணி
நூலக அறிவியல் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி அமைப்பு டி.ஆர்.டி.ஓ., ராணுவம் தொடர்பான பாதுகாப்பு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் இந்த அமைப்பில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் பிரிவில் 30 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நூலக அறிவியல் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி Director, DESIDOC, Metcalfe house, Delhi110054 .
இதற்கான அறிவிப்பு ஜூன் 24-30 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அதில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story