என்ஜினீயர்களுக்கு வேலை
இளங்கலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
நாடு முழுவதும் ஏராளமான ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத பாதுகாப்பு கிடங்குகள் செயல்படுகின்றன. இவற்றில் கொல்கத்தா அருகே உள்ள மேடக்கில் செயல்படும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் தற்போது பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களை பணிக்கு அமர்த்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இளங்கலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நேரடியாக இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம்.
இதற்கான நேர்காணல் 25-7-2017-ந் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் சுய விவரப் பட்டியலுடன், அசல் மற்றும் நகல் சான்தழ்கள், அடையாள அட்டை, புகைப்படங்கள் ஆகியவற்றுடன் சென்று கலந்து கொள்ளலாம். நேர்காணல் நடைபெறும் முகவரி HRD Section (OFILMK building), Near Main gate, Ordance Factory Estate, Yeddumailaram (TS). காலை 8.30 மணி முதலே நேர்காணல் பணிகள் தொடங்கிவிடும் என்பதால் விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே அங்கிருக்கும்படி செல்வது அவசியம்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.ofmedak.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story