கதிராமங்கலம் கிராமமக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கதிராமங்கலம் கிராமமக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 3:45 AM IST (Updated: 12 July 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு எண்ணெய் கிணறு அருகே உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.

சிவகங்கை,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு எண்ணெய் கிணறு அருகே உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும், கிராமமக்களுக்கும் ஆதரவாக சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.


Next Story