கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் கைது
x
தினத்தந்தி 12 July 2017 3:30 AM IST (Updated: 12 July 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் கைது

சோழவந்தான்,

தமிழகத்தில் தற்போது மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டினால் கட்டிட தொழில்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இந்தநிலையில் சிமெண்டு, கம்டபி, செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்து உள்ளது. இதனால் கட்டிட வேலைகள் பாதிக்கப்பட்டதோடு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட முடியாமலும், ஏற்கனவே நடைபெற்ற கட்டிட பணிகள் பாதியில் நிற்பதாலும் கட்டுமான தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தியும், மணல் தடையில்லாமல் கிடைக்க கோரியும், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை தடுத்து, அவற்றின் விலையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோழவந்தானில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் சம்மேளன சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் அரவிந்தன், பிச்சைராஜன் தலைமையில், கிளைச் சங்க நிர்வாகிகள் சிவசுப்பிரமணி, ராஜூ, ஜோசப் ஆகியோர் முன்னிலையில் வட்ட பிள்ளையார் கோவிலிருந்து ஜெனகை மாரியம்மன் கோவில் வரை அரசிற்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

அங்கு அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முகேஸ் உத்தரவின் பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட 50–க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து பேரூராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

1 More update

Next Story