மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்புக்குழு தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், மாவட்ட வன அலுவலர் திருமால், முன்னாள் எம்.பி.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
தர்மபுரி வளர்ச்சியில்லாத மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்து உள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீரில் புளோரைடு பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் 70 சதவீத இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதேபோல் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் 10 நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. வனப்பகுதிகள் அதிகமுள்ள இந்த மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சிக்கான திட்டங்கள், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகளை அந்தந்த துறை அதிகாரிகள் அளித்தால் அவற்றை நிறைவேற்ற மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக காரிமங்கலத்தில் பொதுமக்களிடம் குறைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தனர். இதனை பெற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story